Popular Posts

Sunday, January 23, 2011

ஒரு மணிநேரத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்

திருநெல்வேலி : நெல்லையில், ஒரு மணி நேரத்தில், 35 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் கின்னஸ் சாதனை முயற்சியில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில், காலை 9 மணி முதல், 10 மணிக்குள், 35 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் கின்னஸ் சாதனை முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது.பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மரக்கன்றை நட்டு துவக்கிவைத்தார். சுஷ்லான் காற்றாலை நிறுவனம், ஈசா பவுண்டேசன், ரட்சண்யசேனை ஆகிய நிறுவனங்கள், மரக்கன்றுகளை நெல்லை மாவட்டம் முழுவதிலும், 425 கிராமங்கள், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கியது. அவற்றை நேற்று நட்டனர்.கின்னஸ் சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சியை ரோட்டரி சங்கத்தினர் ஆய்வு செய்தனர்.

No comments: